Thursday, March 25, 2010

என்னை பார் யோகம் வரும் !!!

எங்கோ ஒலிக்கும் குரல்கள் :



7 கழுதை வயசாகிறது, உன்னால ...

இந்தக் கழுதையை கட்டி அழ முடியலே ...

கழுதை! கழுதை! கற்பூர வாசனை உனக்கு தெரியுமா!

சரியான சோம்பேறிக் கழுதை

நீயெல்லாம் கழுதை மாதிரி பொதி சுமக்கத்தான் லாயக்கு !!!


இப்படியெல்லாம் ஒலிக்க விட்டம் பார்த்தபடி கழுதையை பற்றி நினைக்கையில்

வாசலில் உள்ள வாசகம்

என்னை பார் யோகம் வரும் - கம்பீரமும் இல்லாமல் கூனியும் இல்லாமல்

இந்த மனித பிறவியை எண்ணி, கவலை தோய்ந்த முகத்துடன் - கழுதை!!!

Wednesday, March 3, 2010

பூக்களைப் பறிக்காதீர்கள் ...

சூரியனை அதிகம் நேசித்த நான்


இன்று நட்சத்திரங்களாக எத்தனிக்கிறேன்

நிலவே உன்னுடன் வானூர்வலம் செல்ல !



பூக்கள் மீது அதிகம் காதல் கொண்டவன் நன்

இன்று முட்களை நேசிக்கிறேன்

ரோஜாவே உனக்கு காவலாக !



எத்தனைக் காலம் ?


உன்னைப் பறித்து என்னிடமிருந்து பிரித்தவர்கள்


ஊற்றி வளர்த்தவர்களா... ? ஊரான் வீட்டவர்களா ...?

கண்ணீர் உனக்காக

நீ பிரியும் பொழுது

ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விட மாட்டேன் !



என் கண்ணீர் உன்னை

காயப்படுத்தி விடும் என்பதற்காக அல்ல !



இனி உனக்காக அழுவதற்கு

என்னிடம் கண்ணீர் கூட இல்லை...