சின்ன வயதில் தெருவில் விளையாடும்போது
அப்பாவின் ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும் வீட்டிற்கு ஓடுவேன்
படிப்பது போல் நடிக்க அல்ல
அவர் வாங்கி வரும் பதார்த்தங்களை ருசிக்க
சுற்றுலாவெல்லாம் செல்ல வேண்டாம் என அம்மா கூறும்போதும்
சென்று வா மகனே என்று கூறியவர்
வேலைக்கு சென்ற புதிதில் கை செலவிற்கு நான் அனுப்புகிறேன்
நன்றாய் இரு என்று வழியனுப்பியவர்
இன்று என் ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும் வாசல் வந்து வரவேற்கிறார்
அந்த லட்சுமி விலாசில் பகோடா வாங்கி வந்தாய என்று கேட்டு...
நான் அப்பாவாகினேன் அவர் குழந்தையாகிவிட்டார் !
Friday, February 26, 2010
3 பொய்கள்
உன்னை பார்த்து 3 பொய்கள் சொல்ல வேண்டும் :
நீ அழகு !
நீ மட்டுமே அழகு !
உன்னை விட அழகு யாருமில்லை !
நீ அழகு !
நீ மட்டுமே அழகு !
உன்னை விட அழகு யாருமில்லை !
மனிதன் என்பவன்...
கவிதை எழுதினால்தானே கவிஞன் !
காவியம் படைத்தால்தனே கலைஞன் !
அது போல
அது போல
மனிதாபிமானம் கொண்டால்தானே மனிதன் !
Subscribe to:
Comments (Atom)